mayil academy
09 Jan 2025
தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்
தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்
தமிழக மருத்துவக் கல்லூரிகளில்
கூடுதலாக 500 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும்
88 முதுநிலை மருத்துவ இடங்கள்
சென்னை: தமிழக மருத்துவக்
கல்லூரிகளில் கூடுதலாக 500 எம்பிபிஎஸ்
இடங்கள் மற்றும் 88 முதுநிலை மருத்துவ
இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் மாநில மருத்துவக் கல்வி மற்றும்
ஆராய்ச்சி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து மருத்துவக்
கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது:
தமிழகத்தில் அரசு
மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ்
இடங்கள் உள்ளன. அதில், புதிதாக
தொடங்கப்பட்ட 10 கல்லூரிகளில் தலா 100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில், அங்கு கூடுதலாக 50 இடங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 இடங்கள் வீதம் 500 எம்பிபிஎஸ் இடங்கள்
அதிகரிப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி
விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதேபோன்று 88 முதுநிலை இடங்கள் அதிகரிப்பதற்கும்
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.